வடக்கின் உதைபந்தாட்ட பலத்தை மீண்டும் நீரூபிக்கவுல்ல நாவாந்துறை சென்.மேரீஸ் அணி

இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றிலே வடக்கிற்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு.வடமாகாண வீரர்கள் & கழகங்கள் பல சாதனைகளை தேசிய ரீதியில் நிலை நாட்டி வருகிறார்கள்.

அவ் சாதனைகளில் ஒன்றாக 2016 ஆண்டு பிரிவு -02 கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது நாவாந்துறை சென்.மேரீஸ் அணி.

யாழ் .அரியாலை பயிற்சி திடல் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொழும்பு நியூ ஸ்ரார் அணியினை சமநிலை தவிர்ப்பு உதை (penalty) மூலம் வீழ்த்தி பிரிவு – 01 இற்குள் நுழைந்திருந்தது.

2017 ஆண்டு பிரிவு -01 சுற்றுப்போட்டியில் முதல் முறை பங்கு பற்றியது.ஆரம்ப லீக் ஆட்டங்களில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெளிக்காட்ட தவறியதன் விளைவாக தனது குழுவில் 04 வது இடத்தினை பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.எனினும் துரஸ்வதிஸ்ரவசமாக காலிறுதியுடன் தொடரை விட்டு வெளியேறியிருந்தது.

02வது தடவையாக பிரிவு -01ஆட்டங்களில் சுதாவின் தலைமைத்துவத்தின் கீழ் களம் காண காத்திருக்கின்றது.நடப்பு வருட பிரிவு 01 இன் முதல் போட்டியில் ரெட் சன் (RedSun)  அணியை யாழில் எதிர் கொள்ள காத்திருக்கிறது.

இவ் அணியை பொறுத்த வரை யூட்,  ஜக்சன்,  யுனிற்றன்,  தங்கன்,  ஜான்சன் , சுதா,யோனிஸ்ரன் உட்பட சிறந்த வீரர்களை உள்ளடக்கி பலமான அணியாகவே திகழ்கிறது.

எனினும் அண்மையில் தேசிய அணியில் இடம்பிடித்து இருந்த நிதர்சன் & உபாதை காரணமாக அனுபவ வீரர் நிறோஜன் ஆகியோர் இப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமை அணிக்கு பின்னடைவே எனினும் இப் பின்னடைவை இளம் வீரர்கள் பூர்த்தி செய்யவார்களா ?  என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பிரிவு -01 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தை வெல்லவும் & வடக்கின் உதைபந்தாட்ட பலத்தை மீண்டும் நீரூபிக்கவும் எமது வாழ்த்துக்கள்.

 

“நம்பிக்கை இருந்தால் சாதனை படைக்க முடியும்”
 

0 Comments
Latest News
notekoob news
Amanullah's Renown and Kabeer's Barcelona as the Champions of Independence Cup 2020
notekoob news
New Head Coach Appointed for Sri Lanka Mens National Football Team
notekoob news
Amanulla and Roomy Certified Top Coaching Grading from AFC - [ CERTIFICATES INCLUDED ]
notekoob news
UEFA PRO COACH අමීර් ඇලජික් ශ්‍රී ලංකා පාපන්දු පුහුණුකරු ලෙස පත් කිරීමට ඉඩ තිබේ
notekoob news
Who Is Going to be the Champions of VANTAGE FA CUP 2020? - FOOGUE TECHNICAL ANALYSIS
notekoob news
VANTAGE FA CUP SPECIAL MOMENTS : Saunders are the Most Number of FA Cup Champions in the History
notekoob news
E B Channa, Irafan & Eranga are Out from Blue Star
notekoob news
Lyceum Crowned as the Champions Of Inter International School Football Tournament 2020
notekoob news
VANTAGE FA CUP 2020 Live Now - Saunders vs Blue Eagles