தெற்காசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரிசுத்தொகையை கொண்ட உதைபந்தாட்ட தொடர் யாழில்!

தமிழ்வின் மற்றும் லங்காஸ்ரீ இன் பிரதான ஊடக அனுசரணையில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் மின்னொளியில் நடைபெறும் உதைபந்தாட்ட திருவிழா!. தமிழ்வின் மற்றும் லங்காஸ்ரீ இன் பிரதான ஊடக அனுசரணையில் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட வீரர்களுக்கான மாபெரும் களமாக அமையவிருக்கின்ற  North East Premier League-2018” உதைபந்தாட்ட போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் மே முப்பது முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

 

இந்த உதைபந்தாட்ட சுற்று போட்டியில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டு அணிகள் பங்குபற்றி விளையாடுகின்றன.போட்டிகள் அனைத்தும் மின்னொளியில் நடைபெற்றுவருகின்றமை சிறப்பம்சமாகும். இந்த சுற்றுப்போட்டியில் எம் தேசத்து வீரர்களுடன் பிரேசில் நையீரியா கானா கொலம்பியா போன்ற வெளிநாட்டு வீரர்களும் பங்குபற்றி விளையாடி வருகின்றனர். அணிவிபரத்தை எடுத்து நோக்கின், யாழ் மாவட்டம் சார்பாக வல்வை எப்.சி, நோதரன் எலையட் எப்.சி, ரில்கோ கொன்கியூரஸ், தமிழ் யுனைட்டட் ஆகிய அணிகளும் , வவுனியா மாவட்டம் சார்பாக வவுனியா வொரியஸ் அணியும்

மன்னார் மாவட்டம் சார்பாக மன்னார் எப்.சி, மாதோட்டம் எப்.சி போன்ற அணிகளும்

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக வலம்புரி விடுதியின் முல்லை பீனிக்ஸ் அணியும், கிளிநொச்சி மாவட்டம் சார்பாக IBC தமிழின்  கிளியூர் கிங்ஸ் அணியும், அம்பாறை மாவட்டம் சார்பாக தமிழ்வின் இன் அம்பாறை அவென்ஜேர்ஸ் அணியும். மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் ராஜா குளிர்களியின் பட்ரி சுப்பர் கிங்ஸ் அணியும், திருகோணமலை மாவட்டம் சார்பாக லங்காஸ்ரீ  இன் ரிங்கோ ரைய்ரன்ஸ் அணியும் ஆடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டிக்கான பரிசுப்பொதிகளின் பெறுமதிகளை கருதின், முதலாமிடம் பெறும் அணிக்கு ரூபா ஐம்பது இலட்சமும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு முப்பது இலட்சமும் முறையே மூன்று, நான்காம் இடத்தை பெறும் அணிகளுக்கு பதினைந்து மற்றும் ஐந்து இலட்சம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றமை சிறப்பம்சமாகும். மேலும் இத்தொடர் தெற்காசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரிசுத்தொகையை கொண்ட உதைபந்தாட்ட தொடராக காணப்படுவது சிறப்பான விடயமாகும். இந்தியாவில் நடைபெறும் கிறோ சுப்பர் லீக் தொடருக்கு அடுத்தாக இந்த உதைபந்தாட்ட தொடரே அதிக பணப்பரிசில் வழங்கும் தொடராகும்.

0 Comments
Latest News
notekoob news
Football returns after Covid-19 Stoppage in Sri Lanka
notekoob news
Sri Lanka National Team Practices to resume on 22 June
notekoob news
2020 ජුනි 22දා සිට ජාතික කණ්ඩායම (පිරිමි) පුහුණුවආරම්භ කිරීම
notekoob news
Foogue Proudly Presenting SRI LANKAN FREESTYLE SHOW on Youtube
notekoob news
Sri Lanka Football Federation Distributing Rs 300,000 for Champions League Clubs Rs 150,000 for Division 1 Clubs and more
notekoob news
Former Sri Lanka skipper Sanath Jayasuriya donated safety equipments
notekoob news
PSJASL donates personal protective Equipment’s (PPE) to the frontline Media Personals Colombo Districts News Correspondents and Photographers
notekoob news
Hundred Thoushand USD from FIFA to Sri Lanka to fight against COVID19
notekoob news
FA CUP Sponsor VANTAGE Support the Battle Against COVID-19
notekoob news
21 Years old Spanish Football Coach Dies from Corona Virus